தேசிய ஜனநாயக கட்சி இந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்;தி அனுரகுமார திசாநாயக்காவிற்கு ஆதரவளிப்பதாக தீர்மானிதுள்ளதுடன் வெற்றிபெறும் அனுராவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்து அதரவு வழங்க வேண்டும் என கட்சியின் தலைவர் நாரா அருண்காந் தெரிவித்தார்.
கண்டியில் 16-09-2024 திங்கட்கிழமை இடம்பெற்ற தேசிய ஜனநாயக கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கட்சி கடந்த 6 வருடங்களாக மக்கள் மத்தியில் பணியபற்றிவருகின்றது இருந்தபோதும் இந்த நாட்டிலே ஊழல் அற்ற ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த முறை மாற்றாக சிந்தித்து இந்த ஆதரவை தேசிய மக்கள் சக்திக்கு வழங்க தீர்மானித்தோம்.
கடந்த 4 தேர்தல்களை அவதானித்தால் 2005 ம் ஆண்டு ஜனாதிபதியாக போட்டியிட்ட ரணிலை தோற்கடிக்க வேண்டும் என வடக்கு கிழக்கிலே மிகப் பெரும் குரல் எழுந்ததையடுத்து ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்ததுடன் மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றார்.
அதனை தொடர்ந்து சரத் பொன்சேக்காவை ஜனாதிபதியாக்க வேண்டும் என சிறுபான்மை மக்கள் மீண்டும் ஒரு தவறான முடிவை எடுத்தனர். ஆனால் அந்த தேர்தலில் பொன்சேக்கா தோல்வி அடைந்தபோதும் மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றார் ஆகவே தமிழ் மக்களின் வாக்குகள் இரண்டாவது முறையாக வீனடிக்கப்பட்டது
மூன்றாவது முறை தேர்தலிலே தமிழ் மக்கள் ராஜபக்ஸ இனிமேல் தொடர்ந்து ஆட்சியல் இருப்பார்கள் என இன்னும் ஒரு தவறான முடிவெடுத்து முடிவேடுத்து அவருக்கு வாக்களித்தபோதும் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார.; இவ்வாறு தமிழ் மக்கள் எடுக்கின்ற தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றது காரணம் உணர்வு பூர்வமாக முடிவெடுத்தல் காரணமாக கடந்த 15 வருடமாக வாக்குகள் வீனடிக்கப்பட்டது.
எனவே உண்மையில் நாங்கள் உணர்வு பூர்வமாக அன்றி சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்ற தேர்தல் அலை மற்றும் பெரும்பான்மை மக்கள் என்ன முடிவு எடுக்கின்றனர் என ஓரளவு ஊகித்து அதற்கு ஏற்றால் போல அறிவு பூர்வமாக முடிவெடுத்தோம் என்றால் யார் வெற்றி பெறுவார் என்று கணித்து அந்த வேட்பாளருக்கு எங்கள் ஆதரவை கொடுப்பதன் ஊடாக தமிழ் மக்களுடைய வள அபிவிருத்தி தேவைகளை அல்லது உரிமை சார்ந்த விடையங்களை வென்று எடுக்க கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
இருந்தபோதும் இன்று நாட்டிலே பல கட்சிகள் இரண்டாக உடைக்கப்பட்டுள்ளதுடன் கட்சிக்கு கட்சியில் தாவியுள்ளனர் எனவே இவ்வாறான சூழ்நிலையில் கட்சிகளின் வாக்குகள் உடைந்துள்ளது ஆனால் இந்த முறை பெரும்பான்மையான சிங்கள மக்கள் அனுரகுமார திசாநாயக்காவை ஆதரிப்பதாக நாடு முழுக்க அலை ஏற்பட்டுள்ளது அதுமட்டுமல்ல பல கட்சிகளுடன் பேச்சு நடாத்தியுள்ளோம் அதில் தேசிய மக்கள் மக்கள் சகத்தி நிறைவேற்று உறுப்பினர் லால்காந் மிகவும் நேர்மறையான கருத்தை தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு பின்னரும் பேச்சு வார்த்தை தொடர இருக்கின்றோம் எமது மக்களுக்கு ஊழல் அற்ற ஆட்சியை கொடுப்பதன் ஊடாக நாட்டின் பொருளாதார கலாச்சார பண்பாடு. அபிவிருத்தியை மேற்கொள்ள பலமாக அமையும் என்ற காரணத்துக்காக நாங்கள் தேசிய மக்கள் சக்திகு;கு ஆதரவு வழங்க தீர்மானித்தோம். ஏனவே எமது மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்து சம்மேளனம் அனுராவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.