இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இறுதியாக நடித்த ‘ரோமியோ’, ‘மழைப்பிடிக்காத மனிதன்’ திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதைத்டொடர்ந்து அவர், ‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் ‘ஹிட்லர்’ என்கிற புதிய படத்தில் நடித்துள்ளார். இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படம் வரும் 27ம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும்? என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ஹிட்லர்’ படத்தின் முன்னோட்டத்தை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார்
