பாண்டிச்சேரி மாநிலத்தில் வாழும் கல்விமான்களில் நன்கு அறியப்பெற்றவரும். ஈழத் தமிழர்களது வரலாற்று மற்றும் கலை இலக்கிய பங்களிப்புக்கள் பற்றிய புரிதலை ஆழமாகக் கொண்டவரும் குறிப்பாக சுவாமி விபுலானந்தர் அவர்களின் வாழ்க்கை வரலாறு. மற்றும் படைப்புக்கள் தொடர்பாக தேடல்கள் பலவற்றை மேற்கொண்டவரும், தென்னிந்தியாவில் ஈழத்து தமிழ் மொழி சார்ந்த அறிஞர் பெருமக்களை நன்கு அறிந்தும் அவர்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவராக விளங்கும் பாண்டிச்சேரிப் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் தற்போது கனடா வந்துள்ளார்.
ஆறு நாள் பயணமாக அவசர அவசரமான கனடா வந்திருந்தாலும் இங்கு சில தமிழ் மொழிசார்ந்த மற்றும் இலக்கிய அமர்வுகளில் கலந்து கொள்கின்றார் அத்துடன். பேராசிரியர் அவர்களின் மூன்று முத்தான நூல்களின் வெளியீட்டு விழா மருத்துவர் போல் ஜோசப் அவர்களின் ஏற்பாட்டில் 23-09-2024 அன்று ஸ்காபுறோ நகரில் நடைபெறுகின்றது.
பாண்டிச்சேரிப் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் தான் திரும்பிச் செல்லும் பயண நாள் வரையும் பயனுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றார்.
அவற்றுள் கனடா ஸ்காபுறோ நகரில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள ‘தொல்காப்பிய மாநாடு, அத்துடன். தொல்காப்பியர் மற்றும் தொல்காப்பியத்தை கட்டிக்காத்து எமக்காக அளித்த அறிஞர் பெருமக்கள் மற்றும் ஆர்வலர்கள் தொடர்பான ஆவணத் திரைப்படத்தின் காட்சிகளை கனடாவில் , ஆர்வமுள்ளவர்களுக்காக திரையிடுவது போன்ற விடயங்களின் அவர் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவுள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு மருத்துவர் போல் ஜோசப் அவர்களை 416 986 4903 என்னும் இலக்கத்தை அழைக்கவும்