திருப்பதி லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியானதை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து, பழனி பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் நெய்யில் பன்றி இறைச்சி கொழுப்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதாவது, ‘திருப்பதி லட்டு தயாரிக்க விநியோகம் செய்யபட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்றி இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற ஏஆர் உணவகம் பழனி முருகன் கோவிலுக்கும் நெய் விநியோகம் செய்கிறது’ என்று சமூக வலைதளத்தில் வதந்தி பரவியது. இந்நிலையில், இது முற்றிலும் பொய்யான செய்தி என்றும் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, “‘பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது’ என்று அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது” என்றார்.
