உலகிற்கு முதலாவது பிரதமரைத் தந்தது இலங்கை என்னும் மாங்கனித் தீவு. ஆனால் அந்த மாங்கனியைக் கடித்துக் குதறி இனவாத சாயம் பூசி சீரழித்து சின்னாப்பின்னமாக்கி பல ஆண்டுகளுக்கு பின்னர் மாங்கனித்தீவின் பிரதமராக பதவியேற்கவுள்ளார், பல்கலைக் கழக விரிவுரையாளர் ஹரினி அமரசூரிய அவர்கள்.
தோழர் அநுர குமார அவர்களின் பதவியேற்பு அறிவிக்கப்பட்ட பின்னர் புதிய பிரதமரின் தலைமையில் அமைச்சரவையும் புதிய முகங்களோடு இலங்கையின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கையில் நாம் அனைவரும் இணைந்து வாழ்த்த வேண்டும்.
இந்த நேரம் வரை அநுர அவர்கள் சஜித் அவர்களைவிட 12 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார்.
இதன் மூலம் அநுர அவர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அநுரவின் இந்த புது ஆட்சியில், பிரதமராக பதவியேற்கவுள்ள பெண்மணி பல்கலைக்கழக விரிவுரையாளர் ஹரினி அமரசூரிய அவர்கள்.
இவர்,
° இலங்கையின் கல்வியாளர்,
° அரசியல் சமூக செயற்பாட்டாளர்,
° பல்கலைக்கழக விரிவுரையாளர் மற்றும்
° அரசியல்வாதி ஆவார்.
தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஹரிணி அமரசூரிய , இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக கற்கைகள் பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.
54 வயதுடைய இவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் கற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இலங்கையில் அமையப்போகும் புதிய அரசிற்கு எமது வாழ்த்துக்கள்