பிரின்ஸ் பிக்சர்ஸ்’ தயாரித்த ‘லப்பர் பந்து’ படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் படக்குழுவை அழைத்து பாராட்டினார். படத்தை பார்த்த வெற்றிமாறன் படக்குழுவை அழைத்து பாராட்டியுள்ளார். இதை தொடர்ந்து தற்பொழுது படத்தை பார்த்த இயக்குனர் பா. ரஞ்சித் படக்குழுவை அழைத்து பாராட்டியுள்ளார். திரைப்படம் ஒரு குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக அமைந்துள்ளது. பார்க்கிங் திரைப்படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாணிற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
