கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நடைபெற்று வரும் ‘ரொறன்ரோ தமிழ்த் திரைப்பட விழா-2024 இன் இறுதி திரையிடல் நாள் இன்றாகும்.
கனடாவின் மார்க்கம் நகரில் அமைந்திருக்கும் யோர்க் சினிமா வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் சிறப்பாக நடைபெற்று வரும் ‘ரொறன்ரோ தமிழ்த் திரைப்பட விழா-2024 இனது இறுதி திரையிடல் நாள் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமையாகிய இன்றாகும்.
பகல் 12.00 தொடக்கம் பல தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியன திரையிடப்பட்டு வருகின்றன.
குறிப்பாக இந்த வருடத்தில் பல தமிழ் மொழி அல்லாத மொழிகளில் தயாரிக்கப்பெற்ற திரைப்படங்களும் போட்டிக்கு வந்தள்ளமை நண்பர் செந்தூரன் நடராஜாஅவர்கள், மற்றும் அவரது திரைப்பட விழாக் குழுவினருக்கு கிட்டிய வெற்றி என்றே நாம் கருத வேண்டும்.
இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டுமல் ஏனைய சில மாநிலங்களிலும் நன்கு பேசப்படும் ஒரு திரைப்பட விழாவாக ‘ரொறன்ரோ தமிழ்த் திரைப்பட விழா’ திகழ்கின்றது என்றால் அது மிகையாகாது
இன்று ஞாயிற்றுக்கிழமை 22ம் திகதி, நண்பகல் 12.00 மணி தொடக்கம் திரைப்படங்களின் திரையிடல் இடம்பெறுகின்றது. தொடர்ந்து இரவு வெற்றி பெற்ற, அதாவது தெரிவிக்குழுவினால் தேர்ந்தெடுக்கப்பெற்ற திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா இடம்பெறும்.
இதேவேளை. கடந்த 20ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை யோர்க் சினிமாவில் இடம்பெற்ற ‘ரொறன்ரோ தமிழ்த் திரைப்பட விழா-2024 இன் ஆரம்ப வைபவத்தில் பல சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வர்த்தகப் பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு திரைப்பட விழாவின் ஆரம்ப வைபவத்தை சிறப்பித்தார்கள். அங்கு அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு அரசு சார்பான வாழ்த்துப் பத்திரங்களையும் வழங்கிச் சென்றார்கள். நிகழ்ச்சியை நடிகையும் வானொலி அறிவிப்பாளருமாகிய சுதர்சி இக்னாசியஸ் அவர்கள் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டதாகும்
சத்தியன்- கனடா