தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இவர் இதுவரை 156 படங்கள் நடித்து இருக்கிறார். 1978 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி வெளியான ‘பிராணம் கரீது’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார். இந்திய திரையுலகில் மிகவும் வெற்றிகரமான திரைப்பட நட்சத்திரமான மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்பொழுது கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதாவது, இவர் இதுவரை 537 பாடல்களில் 24,000 நடன அசைவுகளை 156 படங்களில் 45 வருடங்களுக்குள் செய்ததால் இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளனர். சிரஞ்சீவியின் 156 படங்களில், கின்னஸ் குழுவினரால் 143 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விருதை பாலிவுட் நடிகர் அமீர் கான் வழங்கி சிரஞ்சீவியை கவுரவித்தார். இந்த விருது சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது.