சத்தீஷ்கரின் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மின்னல் தாக்கியதில் பள்ளி குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர். சோம்னி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜோராடரை கிராமத்தில் மதியம் 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களில் உடல்களை மீட்டனர். ஆனால் உயிரிழந்தவர்களின் அடையாளம் பற்றிய தகவல் ஏதுவும் இதுவரை வெளியாகவில்லை.
சில பள்ளி குழந்தைகள் உள்பட 8 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராஜ்நந்த்கான் காவல்துறை கண்காணிப்பாளர் மோஹித் கார்க் தெரிவித்துள்ளார்.