அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா2 திரைப்படம் டிச.6ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021-ல் வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் ஃபகத் பாசில், சுனில், அஜய் கோஷ், மைம் கோபி உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். சுகுமார் இயக்கிய இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் இந்தியில் அதிக வசூலை ஈட்டியது. இந்தியில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த வெற்றியை தொடர்ந்து புஷ்பா2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை முதலில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் படத்தை டிசம்பர் மாதம் 6ம் தேதி வெளியிடுகிறோம் எனக் கூறினர். இதனிடையே படப்பிடிப்பு சிலநாள் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் வெளியீடு தேதியை படக்குழு மீண்டும் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 6ஆம் தேதி படம் வெளியீடு ஆக உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.