கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் வெளியாகியுள்ளது. பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘96’. இந்த திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பின் பிரேம்குமார், நடிகர் கார்த்தியை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். ‘மெய்யழகன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் அரவிந்தசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் போன்றோர் நடித்துள்ளனர். இது கார்த்தியின் 27வது படமாகும். இந்த திரைப்படத்தை 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆகஸ்ட் 31-ம் தேதி கோவை கொடிசியா ஹாலில் நடைபெற்றது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றது. இப்படமும் 96 திரைப்படத்தைப்போல் ஓர் இரவில் நடக்கும் கதையாக கதைக்களம் அமைந்துள்ளது. திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.