விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியனை வைத்து புதிய படம் இயக்கத் திட்டமிட்டுள்ளதாக் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு தமிழில் வெளியான ‘சகாப்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டின். இப்போது ‘படைத்தலைவன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சண்முக பாண்டியன் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்..கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் சண்முக பாண்டியனுடன் இணைந்து நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் காளி வெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த நந்தன் பட புரோமஷனுக்கான நேர்காணலில் பங்குபெற்று பேசிய சசிகுமார் விஜயகாந்த மகனான சண்முக பாண்டியனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவேன் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது.. ”குற்றப்பரம்பரை நாவலைத் திரைப்படமாக்கும் வாய்ப்பு வந்தபோது, இக்கதையை முதலில் இயக்கத் திட்டமிட்டிருந்தவர்கள் என்கிற முறையில் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாலாவிடம் சென்று விஷயத்தைச் சொன்னேன்.
இருவரும் எனக்கு அனுமதி கொடுத்தனர். நாவலின் காப்புரிமையைப் பெற்றிருந்த பாலா அதை எனக்காகக் கொடுத்தார். அதனை இணையத் தொடராக எடுக்க நினைத்தோம். அதற்காக, மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினேன். அவரும் ஒப்புக்கொண்டார். குற்றப்பரம்பரையின் கதைக்காக சண்முக பாண்டியனிடம் தலை முடியை நீளமாக வளர்க்கச் சொன்னேன். அவரும் வளர்த்தார். படத்திற்காக புகைப்படம் எடுத்தபோது விஜயகாந்த் போன்றே இருந்தார். ஆனாலும் எனது படப்பிடிப்பு தாமதமான சூழலில் அவரே வந்து படைத்தலைவன் படத்தில் நடிக்க ஒப்புதல் கேட்டார் நானும் சரி என்றேன். விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போது என் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்திருக்க வேண்டியது. அது நடக்காமல் போய்விட்டது. அந்த வருத்தம் இன்றும் நீடிக்கிறது. குற்றப்பரம்பரையை இயக்குவேனோ இல்லையோ, நிச்சயம் சண்முக பாண்டியனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவேன்.” எனத் சசிகுமார் தெரிவித்தார்.