இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘அமரன்’ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் ‘அமரன்’ படக்குழு காணொளி பகிர்ந்தது. மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் பின்னணி பணிகளை நிறைவு செய்துள்ளார். இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ‘அமரன்’ படத்தின் பதிவேற்றம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஏய் மின்னலே’ என்ற பாடல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
