சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை பதிவாளராக இருந்த ஜோதிராமன், உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், பதிவாளராக எஸ்.அல்லி நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதி எஸ்.அல்லி செந்தில் பாலாஜி, ஜாபர் சாதிக் வழக்குகளை விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
