எல்லோரும் எம்.ஜி.ஆராக ஆசைப்படுகின்றனர் என தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
கோல்டன் ஈகிள் ஸ்டுயோஸ் சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘தில் ராஜா’. இப்படத்தில் விஜய் சத்யா கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ஷெரீன் நடித்துள்ளார். மேலும், வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் 27 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த சூழலில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துக்கொண்டனர்.
அப்போது, இப்படத்தின் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது, ” ‘தில் ராஜா’ திரைப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். இசையமைப்பாளர் அம்ரீஷ் இன்னும் பெரிய ஆளாக வருவார். இப்படத்தில் நடித்த 2 நடிகைகள் வரவில்லை. அந்த இரண்டு பேருக்கும் தமிழில் யாரும் வாய்ப்பு தரக்கூடாது. இந்தப்படத்தில் அம்ரீஷ் அருமையான பாடல்கள் தந்துள்ளார். இயக்குநர் ஏ.வெங்கடேஷ் 32 நாட்களில் படத்தை எடுத்து முடித்துள்ளார். பட முன்னோட்டம் மிக அருமையாக உள்ளது. தில் ராஜா வெல்லும் ராஜாவாக இருக்கும். விஜய் சத்யா நல்ல நடிகராக வெற்றி பெற வாழ்த்துகள். எல்லோரும் எம்.ஜி.ஆராக ஆசைபடுகின்றனர். ஆனால் அவர் பட்ட கஷ்டம் யாருக்கும் தெரியாது. சாப்பாட்டுக்காகக் கஷ்டப்பட்டவர். அவர், அதிலிருந்து உழைத்து வந்தவர். அவர் அருமை யாருக்கும் வராது.” இவ்வாறு தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.