பெரும்பாண்மை மக்கள் மனங்களில் இனியும் பழையவர்கள் வேண்டாம் நாட்டை கட்டியெழுப்ப படித்த புதிய தலைமுறையினரை தெரிவு செய்ய வேண்டும் என்ற கருத்து அனுரவின் வெற்றிக்கு பின்னர் இன்னும் பலமான பேசுபொருளாகியுள்ளது!
அடுத்த பொது தேர்தலில் பெரும்பாண்மை பலத்தை நிரூபிக்க நாடாளுமன்றத்துக்கு புதியவர்களை அனுப்ப வேண்டும் புதிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற கருத்துக்கள் முக்கியமானதாக அமையும். பழைய உறுப்பினர்களில் 150 மேற்பட்டவர்கள் மீண்டும் நிச்சயமாக வெற்றி பெற முடியாது என்பது மட்டும் உறுதி!
சிங்கள மக்களை போலவே மிக தீவிரமாக முஸ்லிம் இளையோர் மத்தியில் புதியவர்கள் வேண்டும் என்ற கருத்தின் தீவிரத்தினை பிரபல முஸ்லிம் அரசியல் வாதிகளின் கோட்டைகளில் அனுரவுக்கு விழுந்த வாக்குகளும் அதன் பின்னணியில் உள்ள இளைஞர்களின் தீவிரமான செயற்பாடுகளும் நடைமுறை உதாரணங்களாகும்!
வடகிழக்கில் தமிழ்தேசிய பொது கட்டமைப்பு இன்னும் சிதைந்து போக கூடாது, ஆகவே இனி அரசியல்வாதிகளை நம்பி பயனில்லை போராட்ட பின்புலமுள்ள கொள்கை பற்றான புதிய இளையோரை நாடாளுமன்றத்துக்கு சுயேட்சையாக சரி அனுப்ப வேண்டும் என பரவலாக பேசப்படுகின்றது!
ஆனால் சுற்றி என்ன நடக்கின்றது என்பது கூட தெரியாமல் தேர்லுக்கு வந்தோம் எங்கள் தலைவர்கள் கூறிய டெலிபாேனுக்கும் கேசுக்கும் வாக்களித்தோம் என்று மீண்டும் கொழும்புக்கு நடையை கட்டிவிட்டது எமது இளையாேர் கூட்டம்!
மயைகத்தில் அரசியல்வாதிகளின் எடுபுடிகள் “ரட அனுரட்ட கந்துரட அபிட எனவும்” பொது தேர்தலில் மறுபடியும் நாங்கள்தான் என்று கொஞ்சம் கூட பயம் இல்லாம் மக்கள் மறுபடியும் தங்களை நடாளுமன்றம் அனுப்புவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார்கள்!
மக்களே ஏனைய சமூகங்களை விட எங்களுக்கு உள்ள பிரச்சினைகள் ஏராளம் இந்த அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு இன்னும் நூற்றாண்டுகள் கடந்தாலும் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது
உடனடியாக படித்த புதிய இளையாேரை தெரிவுசெய்து அவர்களுக்காக ஆதவினை வழங்குவதற்கு முன்வாருங்கள். அரசியல் அழுத்தங்களினாலும் மிரட்டல்களினாலும் அரச தொழில்களில் உள்ள உத்தியோகஸ்தர்கள் அதிபர் ஆசிரியர்கள் படித்தவர்கள் பொதுவெளியில் கருத்துக்களை தெரிவிக்க கூட தயங்கி இவ்வளவு நாட்கள் இருந்திருக்கலாம்.
ஆனால் இனியும் ஏமாந்து கிடைத்த வாய்ப்பை தவறவிட்டால் எங்களை போன்ற முட்டாள்கள் யாருமில்லை!
Prathap Thiyagaraja