ந.லோகதயாளன்
யாழ் மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபராக இருந்த நாகலிங்கம் வேதநாயகன் கோட்டபாய அரசின் காலத்தில் அங்கஜன் இராமநாதனால் இடமாற்றப்பட்டபோது பதவியை தூக்கி எறிந்துவிட்டுச் சென்றவர் இன்று மாகாணத்திற்கே ஆளுநராக பதவியேற்கின்றார்.
அளவெட்டியை சொந்த ஊராக்கொண்ட வேதநாயகன் 29 ஆண்டுகால அரச சேவையாற்றி ஓய்விற்கு 3 மாதகாலம் இருக்கும்போதே கோட்டபாய மற்றும் அங்கஜனால் அரசியல் பழிவாங்கப்பட்டார்.
இவரது அரச பணிக்காலம் என்பது ஆரம்பம் முதல் இறுதிவரையுமே போர்க் களத்தில் பணியாற்றிய நிலைமைதான் ஆட்சித் தரப்புடன் ஒத்துச்செயற்படாததால் அப்போதைய அரசினால் தூக்கியெறியப்பட்டார்.
தனது ஆரம்பக் கல்வியை அளவெட்டி சாந்த வித்தியாலத்தில் ஆரம்பித்த சிறுவன் வேதநாயகன், தரம் 3 வரையும் அங்கும். அதன்பின்னர் தரம் 8 வரையில் அருணோதயாக் கல்லூரியிலும் கற்றமையோடு க.பொ.த. உயர்தரம் வரையில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியிலும் சுற்று பல்கலைக்கழகத்திற்குத் தேர்வானார்.
பல்கலைக் கழகத்தில் உயிரியல் விஞ்ஞான பட்டப்படிப்பினை 1984இல் நிறைவு செய்த நிலை யில் 1985ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பின் 1985 முதல் 1966 வரை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சமயம். 1986 இல ஆசிரிய சேவையில் இணைந்து 1901ஆம் ஆண்டுவரையில் மல்லாவி மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் யாற்றினார். அதுதான் ஈழத்தில் இந்தியப்படையினர் நிலைகொண்டு போர் இடம்பெற்ற காலம்
1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி அரச நிர்வாகத்தில் பணியில் இணைந்து 1991ஆம் ஆண்டு மே மாதம் 03ம் திகதிவரையில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் பயிற்சியினை நிறைவு செய்தார். இக்காலப் பகுதியில் பொது முகாமைத்துவம் மற்றும் பொது நிர்வாகம் முது மாணி ஆகிய பட்டங்களையும் பெற்றார்.
இவ்வாறுஅவர் பயிற்சிக் காலத்தை நிறைவு செய்து வெளியேறிய அச்சமயம் 2 ஆம் கட்ட ஈழப் போர் உச்சம் பெற்றிருந்த வேளை நெடுந்தீவுப் பிரதேச செயலகத்திற்கு 1991.05.04முதல் நியமிக்கப் பட்டார். அந்தக் காலத்தில் மண்டைதீவுபாலம் யாழ் கோட்டை மீதான தாக்குதல் காரணமாக முழுமையாக தகர்க்கப்பட்டிருந்தது. அதன் ஊடே பயணிக்க இரு பனைமரங்கள் மட்டுமே இணைப்பாகப் பயன் படுத்தப்பட்ட நிலையில் துவிச்சக்கர வண்டியில் சென்று குமுதினிப் பட்கின் மூலம் நெடுந்தீவிற்கு பயணிக்க வேண்டும். அப்போதும் ஊர்காவற்றுறையில் படையினர் நிலைகொண்டிருந்தனர்.
குறிகட்டுவானில் புலிகள், நயினாதீவில் கடற்படையினரிடம் என இரு தரப்புச் சோதனையை தாண்டியே நெடுந்தீவு பயணிக்க வேண்டும். இத்தனை நெருக்கடியின் ஊடாக பயணித்து நெடுந்தீவில 5 மாதங்கள் பணியாற்றிய நிலையில் மீண்டும் தீவகம் முழுமையாக படையினரின் கட்டுப்பாட்டில் வந்தபோது சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு அவர் இடமாற்றப்பட்டார்.
பின்னர் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டார். 1993ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு ஓகஸ்ட் வரையில் தெல்லிப்பழை பிரதேச செயலாளராகவும் பணியாற்றினார். 1996 முதல் 2002.12.31 வரையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளராகப் பணியாற்றிய போதே 2003.01.01 முதல் கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலதிக செயலாளராக பணியாற்றிய காலத்தில் அப்போதைய அரசாங்க அதிபர் இரசநாயகம் 2007-ஆம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2007முதல் கிளிநொச்சி மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் இறுதி யுத்தம் காரணமாக பல நெருக்கடிகள், இடர்பாடுகள் உயிர் ஆபத்துக்களை கடந்தே பணியாற்ற வேண்டியிருந்தது. அதில் இருந்து தப்பி வவுனியா சென்றும் பணியாற்றியபோது, 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் பணியாற்றிய சமயம் இறுதி யுத்த காலத்தில் ஆற்றிய சேவைகள் தொடர்பான விசாரணை என்னும் பெயரில் பல தகவல்களை மறைக்க 2009.07.20 அன்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டு போதிய விசாரணையோ அல்லது எந்தவிதமான குற்றச் சாட்டுகளோ இல்லாது தடுதது வைக்கப்பட்டிருந்த நிலையில் 2010 ஜனவரி 10ல் விடுவிக்கப்பட்டு 2010.01.20 தொடக்கம் திரும்பவும் அமைச்சில் பணிக்கு அமர்த்தப்பட்டார். அவ்வாறு அமைச்சில் பணிக்கு அமர்த்தப்பட்ட நிலையில் 2010ஆம் ஆண்டு ஜுலை மாதம் மிகவும் நெருக்கடியான காலத்தில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மன்னார் மாவட்டத்திற்கு மாற்றபட்டு அதே ஆண்டு நவம்பர் மாதம் மீளவும் முல்லைத்தீவிற்கே இடமாற்றப்பட்டார.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றிய காலத்திலேயே 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி பலரின் போட்டியின் மத்தியிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அதாவது தனது சொந்த மாவட்டத்துக்கு செயலாளராகத் தெரிவாகி பதவி யேற்றார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டமை முதல் மாவட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் என்ன தேவை என்பதனை நன்கு அறிந்து அதே சிந்தனையாக இருந்தார். உறங்கும் நேரம் தவிர்ந்து ஏனைய நேரம் முழுமையாக மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் சிந்தித்த ஒருவர் என்றபட்டியயில் இடம் பிடித்தார்.
யாழ் மாவட்டத்தில் பணியாற்றிய சமயம் அரசியல் கட்சிகளை மட்டுமல்ல. சக பணியாளர்களில் கூட ஒரு சிலரை பகைக்க வேண்டி நேரும் எனத் தெரிந்தும் பொதுமக்கள் கோரும் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளித்தமையினால் சிலர் பகையை எதிர்கொண்டார். அவர் நினைத்திருந்தால் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் பகைக்காது சென்றிருக்கலாம். லஞ்சம் கோரியோரை இடமாற்றாதிருந்திருந்தால். வேண்டுமென்றே மறுத்த வீட்டுத் திட்டத்தை நேரில் தலையிட்டு வழங்காதிருந்தி குந்தால், அரசியல்வாதிகளைத் திருபதிப்படுத்த பொருத்தமற்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த தலையாட்டியிருந்தால், எஞ்சிய 3 மாதங்களும் பதவியில் நீடித்திருக்கவும் முடியும். சக உத்தியோகத்தர்களிடமும் நன்றிபாராட்டியிருக்கவும் முடியும்.
இதற்கும் அப்பால் எந்த மக்களும். எப்போதும் மாவட்டச்செயலாளரை சந்திகக முடியும் என்ற நிலைமையை யாழ்ப்பாணத்தில் உருவாக்கினார். இவரின் காலத்தில்தான் சில அரசியல் கட்சிகள். அல்லது எதிர்பார்ப்பில் இருந்தோர்.தமக்கு இவர் இசையவில்லை என்பதனால் இவர்மீது அரசியல் முத்திரையினையும் குத்தத் தவறவில்லை. இத்தனைக்கும் தாக்குப் பிடித்த நிலையிலேயே மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தபோது கட்டாயமாக இடமாற்ற முயற்சிக்கப்பட்டதனால் பதவியை தூக்கியெறிந்து விடை பெற்றார்.
இவரது சேவைக் காலத்தில் அரச சேவை மட்டுமன்றி உதவி என நாடி வந்தவர்களிற்கு வாரி வழங்கிய இவரின் தனிப்பட்ட உதவிகள் இன்றும் தொடர்கின்றன. இதில் க. பொ.த உயர்தர மாணவர்கள் 15 பேருக்கான மாதாந்தம் தலா3 ஆயிரம் ரூபா உதவி. அதேபோன்று பல்கலைக் கழகத்திற்கு தேர்வான 150 மாணவர் களிற்கு உதவி ஏற்பாடு என்பன குறிப்பிடக்கூடியவை யாகும்.
இவ்வாறு சேவையாற்றிய நிர்வாக அதிகாரி அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டு. ஓய்வு பெறுவதற்கு பதவியை தூக்கியெறிந்தவருக்கு இன்று நேரடி அரசியல் பதவி கிட்டியுள்ளது. இதிலும் சாதிப்பாரா அல்லது சோதிப்பாரா என்பதே அவர் லுன் உள்ள சவால் அதனையே அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஏனெனல் எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில் அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பிலே ஆனால் எமது நாட்டில் அரசியல் கலப்படமற்ற நிர்வாகத்திலே என்பதனால் அதற்காக காத்திருப்பவர்கள் பலர்..