பு.கஜிந்தன்
மோட்டார் சைக்கிள் மதலுடன் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 25-09-2024 நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாற்பண்ணை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த பாலசேகர் ஹரிபிரசாத் (வயது 26) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 15ஆம் திகதி முல்லைத்தீவில் உள்ள கோவில் ஒன்றுக்கு நாதஸ்வர கச்சேரிக்கு சென்றுள்ளார். பின்னர் 16ஆம் திகதி வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தவேளை சாவகச்சேரியில் உள்ள பாடசாலை ஒன்றின் மதல் மீது மோதி விபத்துக்குள்ளானார்.
இந்நிலையில் ஆம்புலன்ஸிற்கு அறிவித்தல் வழங்கிய நிலையில் ஒரு மணத்தியாலத்திற்கு பின்னரே ஆம்புலன்ஸ் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமாலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.