சந்தைப்படுத்தல் நிறுவனத்தை கனடாவில் நன்கு அறிமுகமான ஒலிபரப்பாளராd அன்ரன் அருமைநாயகம் கடந்த 21ம் திகதி ஸ்காபுறோவில் ஆரம்பித்து வைத்தார்
Marketing Experts Inc என்னும் வர்த்தக ஆலோசனை மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனத்தை கனடாவில் நன்கு அறிமுகமான ஒலிபரப்பாளராக விளங்கும் அன்ரன் அருமைநாயகம் அவர்கள் 21ம் திகதி சனிக்கிழமை மதியம் ஸ்காபுறோவில் ஆரம்பித்து வைத்தார்.
மேற்படி நிறுவனத்தின் திறப்பு விழாவில் நாடாவை வெட்டி நிறுவனத்தை திறந்து வைத்தார், அண்மையில் ஆரம்பிக்கப்பெற்று வெற்றிகரமாக வளர்ந்து வரும் ஸ்காபுறோ ‘ விஜயா நகைமாளிகை’ உரிமையாளர் ருபன் அவர்கள். அத்துடன் சிறப்பு விருந்தினராக உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கலந்து கொண்டார்.
அன்றைய திறப்பு விழாவில் பல ஊடக நண்பர்களும் கலந்து கொண்டனர்.
வர்த்தகப்பிரமுகர்களும் பெருமளவில் வருகை தந்து அன்ரன் அருமைநாயகம் அவர்களையும் நிறுவனத்தையும் வாழ்த்திச் சென்றார்கள்.
அன்றைய நிகழ்வில் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் கோபி பொன்னுத்துரை அவர்கள் மற்றும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களின் அ லுவலகப் பிரதிநிதி திமோ அவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு மத்திய அரசு மற்றும் மாகாண அரசு ஆகியவற்றின் சார்பான பாராட்டுப் பத்திரங்களை அன்ரன் அருமைநாயகம் அவர்களுக்கு வழங்கிச் சென்றார்கள்.
கனடா உதயன் பத்திரிகையின் ஆசிரியர் அங்கு உரையாற்றும் போது “இன்றைய திறப்பு விழாவில் எனது அருமைச் சகோதரர் அன்ரன் அருமைநாயகம் அவர்களின் நிறுவனத் திறப்பு விழாவில் அதனை திறந்து வைத்தவரின் சிறப்பு தான் மேலோங்கி நிற்கின்றது. ஸ்காபுறோவில் வெற்றிகரமாக வளர்ந்து வரும் ஸ்காபுறோ ‘ விஜயா நகைமாளிகை’ உரிமையாளர் ருபன் அவர்கள் அண்மையில் தனது நகைமாளிகையில் தங்க நகைகளை கொள்வனவு செய்தவர்களுக்கிடையில் நடத்தப்பெற்ற அதிஸ்டக் குலுக்களில் முதலிடத்தைப் பெற்றவருக்கு ஒரு விலையுயர்ந்த அவ்டி காரை பரிசாக வழங்கினார். அவரது கைகளால் இன்று இந்த நிறுவனம் திறந்து வைக்கப்பெற்றிருக்கின்றது ஓரு எதிர்கால வளர்ச்சியின் அடையாளமே! என்று தெரிவித்தார்.
இங்கு காணப்படும் படங்கள் திறப்பு விழாவில் எடுக்கப்பட்டவையாகும்.