யாழ்ப்பாணம். தேவரையாளி இந்து கல்லூரியின் பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் சதானந்தன் செல்வானந்தன் தலைமையில் 27-09-2024 பி.ப 01.00 மணியளவில் பாடசாலையின் க.மு.சின்னத்தம்பி திறந்தவெளி அரங்கில் இடம் பெற்றது.
முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு விழ மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு மங்கள சுடர்கள் பிரதம, சிறப்பு விருந்தினர்களால் ஏற்றிவைக்ப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதில் தெரிவு செய்யப்பட்ட சாதனையாளர்களுக்கான பரிசில்கள், மற்றும் சான்றிதழ்களை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பாடசாலையின் பழைய மாணவியான திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை வைத்திய அதிகாரி சௌமியா செந்தூரன், அவரது துணைவரும், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியருமான இளங்கோவன் செந்தூரன் உட்பட பலரும் வழங்கிவைத்தனர்.
இதில் பிரதேச மக்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.