இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பான் இந்தியா மூவியாக வெளியாகவுள்ள கேம் சேஞ்சர் படத்தில் இடம்பெறும் ரா மச்சா மச்சா பாடல் புரமோ வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். இந்தியன் – 2 படத்தின் எதிர்மறையான விமர்சனங்களைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக, தமன் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இரண்டாவது பாடலான ‘ரா மச்சா மச்சா’ பாடலின் புரமோ வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கான தமிழ் வரிகளை விவேக் எழுதியுள்ளார். நகாஸ் ஆசிஸ் பாடியுள்ளார். பாடல் வருகிற செப். 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட உள்ளது. பாடல்களைத் தொடர்ந்து விரைவில் முன்னோட்டம் வெளியாகும் எனத் தெரிகிறது. இப்படம் டிச. 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
