கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சோலை பல்லவராயன் கட்டு கிராமத்தில் அமைந்துள்ள மகேஸ்வரன் சத்தியா என்பவரின் வாழ்வாதாரமாக வளர்க்கப்பட்டு வந்த 11 ஆடுகளும் ஒரு குட்டியும் 29-09-2024 மாலை உயிரிழந்துள்ளன.
குறித்த ஆடுகள் அன்றைய தினம் மேச்சலுக்கு சென்ற இடத்தில் தனிநபரது காணிக்குள் சென்றுள்ளது.
இந்நிலையில் தண்ணீருடன் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் இரசாயன உரம் கலக்கப்பட்டு நீர் ஆடுகளுக்கு பருக வைக்கப்பட்டமையால் 11 ஆடுகளும் உயிரிழந்திருந்த நிலையில் காணப்பட்டது. இது தொடர்பில் பூநகரி போலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.