விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியாகும் என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகைக்கு பின், திரைக்கு வந்த திரைப்படம் ‘தி கோட்’. லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது திரைப்படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடிக்குமேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அக். 3ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஓடிடியில் வெளியாகிறது.
