ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷிங்கெரு இஷிபா (வயது 67) தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானின் முன்னாள் பிரதமர் பியூமியோ கிஷிடா பதவி விலகியதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை(27-ம் தேதி) இஷிபாவை கட்சித் தலைவராக ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தேர்வு செய்தது. இந்நிலையில், அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தினால் அவர் முறைப்படி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இஷிபா தனது புதிய அமைச்சரவையை விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இஷிபா, ஏற்கனவே, பாதுகாப்பு, விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைகளில் அமைச்சராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
