லைக்காவின் பணத்தின் மூலம் ஒரு தமிழ் தேசிய கட்சி உருவாக்கம் பெற ஆரம்பித்திருப்பதாக தகவல்,
இந்த நாசகார அரசியல் சதியினால் பயன்படப் போகின்றவர்கள் மகிந்தாவும் கோட்டாபாயவும் தான் என்பதும் சில அரசியல் அவதானிகளால் உணரப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. காரணம். மகிந்தா மற்றும் கோட்டாபாய ரணில் ஆகியோரின் நெருங்கிய நண்பரான லைகா அதிபர் சுபாஸ்கரன், அவர்களின் வீழ்ச்சியை தாங்கிக் கொள்ளவில்லை என்பதும் கொழும்பில் பேசப்படும் ஒன்றாக உள்ளது என அறியப்படுகிறது.
இந்த கட்சி தொடர்பாக, அதன்பொருட்டு டெலோ செல்வம் அடைக்கலநாதன், ஶ்ரீதரன், மணிவண்ணன் உட்பட பல்வேறு தரப்பினர் அணுகப்பட்டு ஒரு இணக்கம் எட்டப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பிலான உண்மை நிலவரங்கள் விரைவில் தெரியவரலாம்..! யார் யார் ஒன்று சேர்கிறார்கள், யார் யார் ஒரு கட்சியில் இருந்துகொண்டு மறுபக்கம் முதலைகள் பிடியில் சிக்கியிருக்கிறார்கள் என்பது விரைவில் தெரியவரும்!
தமிழ் தேசிய அரசியல் பண முதலைகளிடம் விலைபோய்விட்டன, சங்கு சின்னத்தில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் தெரிவு கூட அப்படியான ஒன்றின் அடிப்படை தான் என்று பலமுறை என்று அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்திருந்தார்..
பார்ப்போம்- காலம் அனைத்து உண்மைகளையும் நடுத்தெருவிற்கு கொண்டுவரும்! ஒருபக்கம் ஐபிசி பாஸ்கரன், மறுபக்கம் லைக்கா சுபாஸ்கரன் என்று இரு பண முதலைகள் தமிழ் தேசிய பரப்பில் அரசியல் தலைகள், வால்கள் முதற்கொண்டு அனைவரையும் வலைக்குள் போட்டு வைத்திருக்கின்றனர். தமிழ் தேசியத்தின் பெயரில் மிளகாய் அரைக்க தயாராவார்கள் பார்க்கத்தானே போகிறோம்!
https://www.facebook.com/share/v/1XTwuFAVxo/?mibextid=WC7FNe