பு.கஜிந்தன்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட உடற்பயிற்சி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மீண்டும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
அகில இலங்கை பாடசாலை களுக்கு இடையிலான தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டிகள் 30-09-2024 அன்றையதினம் குருநாகல் மலியதேவ பெண் கள் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றன. இப்போட்டியில் வடக்கு
மாகாணத்தை சேர்ந்த ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி தங்கம் வென்று சாதனைபடைத்துள்ளது. இப் போட்டியில் பங்கேற்ற வடக்கு மாகாணப் பாடசாலையான இளவாலை ஹென்றி அரசர் கல்லூரி அணி வெள்ளி பதக்கத்தை சுவீகரித்துள்ளது.
இதில் ஆண்கள் பிரிவில் பங்குபற்றி ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி தேசிய மட்ட உடற்பயிற்சிப் போட்டியில் இதுவரை பங்கேற்ற போட்டிகளில் 5 தங்கப் பதக்கம், 5 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து இலங்கையில் விளையாட்டில் அதிக பதக்கம் வென்ற பாடசாலைகளில் முன்னணியில் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இளவாலை ஹென்றி அரசர் கல்லூரி அணியும் கடந்த காலத்தில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக் கங்களை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை தேசியமட்ட உடற்பயிற்சி போட்டியில் பெண்கள் பிரிவில் பங்கேற்ற ஊர்காவற்றுறை கரம்பொன் சிறிய புஸ்பம் மகளிர் பாடசாலை தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தினை பெற்று வெண்கலப் பதக்கத் தினை பெற்றுள்ளது. குறித்த பாடசாலையும் கடந்த காலத்தில் தங்கம், வெள்ளி பதக்கத்தினை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.