வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் மெக்சிகோவின் ஆளுங்கட்சியான மொரேனா கட்சி (இடதுசாரி) சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட கிளாடியா ஷீன்பாம், ஏறக்குறைய 60 சதவீத வாக்குகளைப் பெற்று, அசைக்க முடியாத முன்னிலையுடன் வெற்றி பெற்றார். இந்தநிலையில் 3 மாதங்களுக்கு பிறகு நடந்த பதவியேற்பு விழாவில் மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.
