பிரபல நடிகர் மோகன்ராஜ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நீண்ட காலமாக மோகன்ராஜ் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். மேலும், அவருக்கு நீண்டகாலமாக நீரிழிவு நோயும் இருந்தது. இந்த நிலையில், திருவனந்தபுரம் காஞ்சிரம்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிரிழந்தார்.
‘கீரிடன் ஜோஸ்’ என்ற கடுமையான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் மோகன்ராஜ். 1989 ஆம் ஆண்டு வெளியான ‘கிரீடம்’ படத்திற்கு பிறகு மலையாள திரையுலகில் வில்லனாக இருந்தார். திரைப்படத்தில் ‘கீரிடன் ஜோஸ்’ என்ற ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் அவரது வாழ்க்கையை உயர்த்தியது. மேலும் கதாபாத்திரத்தின் பெயரால் அவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடித்து வெளியான ‘செங்கோல்’, ‘ஹலோ’, ‘நரசிம்மம் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றன.