பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே குண்டு வெடித்தில் சீனர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு சீனா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அங்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக சீனர்கள் பலர் பாகிஸ்தானில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களை குறிவைத்து அவ்வபோது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் சீனர்கள் 3 பேர் உயிரிழந்தனர். சீனர் உட்பட 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கராச்சி விமான நிலையத்தை சுற்றியுள்ள இடங்கள் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளது. வெடிப்பு சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் சில கார்களும் தீ பிடித்து எரிந்தன. விரைந்து வந்த தீ அணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தியுள்ளன.