அதிமுக 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதிமுகவின் 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், மற்றும் மூத்த தலைவர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கட்சி அலுவலகம் முன் கூடிய தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.