தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. ‘காதல் கொண்டேன், மன்மதன், மங்காத்தா, பையா’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். தற்போது, விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தி கோட்’ படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இசைக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது மட்டுமல்லாமல் பல படங்களையும் தயாரித்த வருகிறார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மாமனிதன்’ திரைப்படங்களை அவர் தயாரித்துள்ளார். இந்தநிலையில், தற்போது யுவன் சங்கர் ராஜா இயக்குனர் அவதாரம் எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வலையொளி சேனலுக்கு பேட்டி அளித்த யுவன் சங்கர் ராஜா, “தான் புதிதாக இயக்கப்போகும் படத்தில் கதாநாயகனாக சிம்புவை நடிக்க வைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.