பு.கஜிந்தன்
18-10-2024 அன்றையதினம் யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் மின்சாரம் தாக்கி ஆணொருவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐந்தாம் வட்டாரம், அனல தீவு பகுதியைச் சேர்ந்த நடராசா துசியந்தன் (வயது 37) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
அனலைதீவில் உள்ள ஐயனார் ஆலயத்தில் பாடல் ஒலிபரப்புவதற்காக மின்சார இணைப்புகளில் ஈடுபட்டபோது தவறுதலாக மின்சாரம் தாக்கியுள்ளது. இந்நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உடற்கூற்று பரிசோதனைக்காக அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.