கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா. இங்கு அல்கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப், ஐஎஸ் போன்ற பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்புப்படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், தலைநகர் மொகதிசுவில் உள்ள காவல்துறை அருகே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். அல்கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
