இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி நடந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் இருந்து செயல்பட்ட முக்கிய புள்ளியான, ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வாரை இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்கி அழித்துள்ளது. இது குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
“அக்டோபர் 7-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு யஹ்யா சின்வார் மூளையாக செயல்பட்டுள்ளார். அந்த தாக்குதலில் உயிரிழந்த 48 பிரான்ஸ் குடிமக்கள் உள்ளிட்ட அனைவரையும், அவர்களின் அன்புக்குரியவர்களையும் இன்று நான் நினைவு கூறுகிறேன். ஹமாஸ் அமைப்பினரால் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்துகிறது.” இவ்வாறு இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.