அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் வடமாகாணத்தில் முதல் முறையாக 2ஆம் இடத்தை பெற்றுகொண்ட யாழ் திருக்குடும்ப கன்னியர் மட அணிக்கு யாழில் அமோகவரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கை கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அகில ரீதியில் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையேயான கூடைப்பந்தாட்டப் போட்டியில் 17 வயது பிரிவில் இறுதி போட்டியில் பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியர் மடம் அணியுடன் மோதிய
யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் அணி 2ஆம் இடத்தை பெற்றுக்கொண்டது.
இதன் மூலம் வடமாகாண பாடசாலை ஒன்று 17 வயது பிரிவில் முதல்முறையாக தேசிய ரீதியில் 2 ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட சம்பவமாக இது பதிவாகியது.
யாழ் திருக்குடும்ப கன்னியர் மட அணிக்கு தனுஷ் ராஜசோபனா பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன் நிலையில் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் அணிக்கான கௌரவிப்பு நிகழ்வு பாடசாலை சமூகத்தின் யாழ்ப்பாணத்தில் 18-10-2024 அன்று இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் மரியசீலி மரியதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
சென்பற்றிக்ஸ் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன், வடமாகாண உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ராஜசீலன், யாழ்ப்பாண வலய உடற்கல்வி உதவிக் பணிப்பாளர் சாரங்கன் , ஆசிரிய ஆலோசகர் சசிகுமார், யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்க செயலாளர் யசிந்தன், யாழ்ப்பாண பிரதேச செயலக விளையாட்டு அமைச்சின் உத்தியோகத்தர், அருட்சகோதரி லுமினா உள்ளிட்ட பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள்,கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு இருந்தனர்.