நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள் – சிறப்பு நிகழ்ச்சியாக 08.10.2024 அன்று சென்னை – அண்ணா நூற்றாண்டு பல்கலைக் கழக வளாகத்தில் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் (பம்மல்) சார்பில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவில் முதல் நிகழ்ச்சியாக திரு.வி.ராகவேந்தர் கைவண்ணத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த திரைப்படங்களிலிருந்து சிறப்புக் காட்சிகள் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிவாஜியின் அதிதீவிர ரசிகரும் சமூகக் காவலருமான திரு.சிவாஜி ரவி அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு கலையுலகப் பிரமுகர்கள் – இயக்குனர் வி.சி.குகநாதன், வசனகர்த்தா பால முருகன் அவர்களின் மகன் திரைக்கதை வசனகர்த்தா திரு.பூபதி ராஜா, முனைவர் தென்காசி கணேசன், சர்வதேச ஊடகவியலாளர்திரு.சிவா பரமேஸ்வரன், திரு.வி.ராகவேந்தர், திரு.முரளி சீனிவாஸ், பிரபல பின்னணி பாடகர் பி.பி. சீனிவாஸ் அவர்களின் புதல்வர் பி.பி.பணீந்தர், முனைவர் ரவி தமிழ்வாணன் மற்றும் திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் பங்கேற்று உரையாற்றினர்.
மேலும் கனடா வாழ் எழுத்தாளர் திரு. வீணைமைந்தன் அவர்கள் எழுதிய நடிகர் திலகம் சிவாஜியும் தமிழ் சினிமாவும் நூல் வெளியிடப்பட்டது.
கவிஞர் காவிரிமைந்தன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்