யாழ்ப்பாணம் புதுச் செம்மணி வீதி கல்வியங்காட்டை சேர்ந்த நடராஜா சந்திரா – சந்திரா சிவலோஜினி தம்பதியரின் புதல்வியும், கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா அஜெக்ஸ் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கேமலதா விக்னராஜ் அவர்களின் 10வது ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவாய் ஆண்டுகள் முப்பத்தி ஏழு
எம்மோடு வாழ்ந்தாய் இதயங்களைக் கவர்ந்தாய் கேமா!
துன்பங்கள் வந்தாலுத் துவண்டாத இரும்புப் பெண்
தூரவே போய்விட்டாலும் தினமும் உன்னைக் கனவில் காண்கின்றோம்
என்புருகிப் போய் இன்று பத்து ஆண்டுகள் ஆகினவே
எத்தனை இரவுகள் கழிந்தாலும் எமக்கு பகலாகத் தெரிகின்றாய்
உன் வயிற்றில் உதித்த செல்வங்கள் இப்போது எம் அருகே
உலகத்தை வென்றவராய் திகழ்கின்றார்கள் உனக்கும் பெருமைதானி!
நீயில்லா உலகம் எமக்கு நிம்மதியைத் தர மறுக்கின்றது
நித்தமும் உன் முகத்தை அசையாத உருவமாய் காண்கின்றோம்
தீயிலெரிந்த கானகம் போல் எம் முன்னால் வெறுமையே மிச்சம்
தாய்மையின் இலக்கணமாய் தாய் தந்தையரை போற்றியே வாழ்ந்தாய்
உயிராய் மதித்து உடன் பிறந்த உறவுகளை கலங்காமல் பேணி வந்தாய்
உத்தமி என்றும் பெயரெடுத்து உன்னவனின் இதயத்தில் தேனைத் தெளித்தாய்
காயிருந்த மரத்தில் கனியைக் காணா ஏக்கத்தை உன் இழப்பு தருகின்றது
காலம் கடந்தாலும் எம்மை அது வருத்தியே தொடரும்!
உன் பாதம் பதிந்த புற்தரைகள் பின்தோட்டத்தில் நீ ரசித்த பூச்செடிகள்
உயிராய் நீ நேசித்த உறவுகளின் இதயங்கள் உன்னை இழந்த துயரத்தில்
தன்னலம் கருதாமல் வாழ்ந்த நாட்களை நீ மகிழ்வோடு ஏற்று நின்று
தவிக்க விட்டுச் சென்றாய் உன்னை நேசித்தவர்கள் அனைவரையும்
இன்னும் நாம் உண்ணும் போதும் உறங்கும் போதும் உன் நினைவோடுதான்
இலகுவில் கிட்டாத ஒரு அரிய பொக்கிசம் எம் கரம் விட்டுச் சென்றதுபோல்
கண்மணியே உன் பிரிவை தாளாத் துயருடன் அனுபவிக்கும் காலம்
எம் உயிர் உள்ளவரை தொடரும் அது வரை நீ எம்மோடுதான்!
உன் நினைவால் வாடும் பாசமுள்ள அப்பா, அம்மா, அன்புக் கணவர், பிள்ளைகள்,
சகோதர, சகோதரரிகள், மைத்துனர், மருமக்கள், பெறாமக்கள் மற்றும் உறவினர்கள்
தொடர்புகளுக்கு: (647) 335-5841, (416) 754-7485