சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த கொத்திகுட்டை ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். விடுமுறை தினத்தையொட்டி ஏரியில் குளிக்க வந்தபோது, 2 பெண்கள், ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளனர். அதன்படி, ரேவதி, சிவஸ்ரீ, திர்ய தர்ஷினி ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு காவல்துறை அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
