ஐஸ்வர்யா லட்சுமி மலையாள சினிமாவில் நுழைந்து பல படங்களில் நடித்து இருந்தாலும் தமிழிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி’, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் இதற்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இவர் தற்பொழுது ‘ஹலோ மம்மி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனரான வைஷக் இளன்ஸ் இயக்குகிறார். படத்திற்கான கதையை சஞ்சோ ஜோசப் எழுதியுள்ளார். இப்படத்தில் ஷரப் உதீன் கதாநாயகனாக நடித்துள்ளார். இது ஒரு நகைச்சுவை கலந்த பேண்டசி திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தில் அஜு வர்கீஸ், ஜெகதீஷ், ஜானி ஆண்டனி, பிந்து பேனிக்கர், சன்னி இந்துஜா மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவை பிரவீன் குமார் மேற்கொண்டுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தநிலையில், இப்படத்தின் பதாகை வெளியாகி உள்ளது.
