— மாநகரசபை முன்னாள் மேயரும் வேட்பாளருமான தியாகராசா சரவணபவன்
(கனகராசா சரவணன்)
தமிழரசு கட்சியின் எந்த நிகழ்விலும் பா. அரியேந்திரன் பங்கு கொள்ள கூடாது என கட்சி தீர்மானம் இருக்கின்றபோது அவர் சிறினேசனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுவது தீர்மானத்தை மீறிய செயல் அதேவேளை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து சென்றவர்கள் பதவிகளுக்கு இருப்பவர்களுக்கு எமது கட்சியில் இடம் இல்லை வெளியேறியவர்கள் வெளியேறட்டும் வீடு மிக சுத்தமாக வரும் என மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேஜரும் வேட்பாளருமான தியாகராசா சரவணபவன் தெரிவித்தார்.
தமிழர கட்சியின் வீட்டுச்சின்னத்தில் 7ம் இலக்கத்தில் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மேஜரின் கல்லடியிலுள்ள காரியாலயத்தில் 21ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகமாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்
கடந்;த காலத்தில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக என்னை தெரிவு செய்வதற்கு என்னை ஒரு வட்டார உறுப்பினராக தெரிவு செய்த கல்லடி வாழ் மக்களுக்கு முதலில நான் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு மாநகர சபை முதல்வராக தெரிவு செய்வதற்கு துணையாக நின்ற மாநகர சபை வட்டார உறுப்பினர்களுக்கும் தலைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பான நாங்கள் மாநகரசபை ஆட்சியை கைப்பற்றி கடந்த ஐந்து வருட காலமாக நகர்வாள் மக்களுக்கு வினைத்திறன் ஆனாதுமான மிகத் திறமையான ஆளுமையைச் செய்து 500க்கும் மேற்பட்ட வீதிகள் புனரமைக்கப்பட்டு தேவையான அளவு வடிகான்கள் புனரமைக்கப்பட்டு தெற்காசியாவிலேயே முதலாவதும் இலங்கையிலே முதலாவது சிறுவர் சிநேகி அபிவிருத்தி செயல்பாடு மாவட்டத்திலே நான் அறிமுகப்படுத்தி இருந்தேன். அதன் மூலமாக எனது செயல்பாடுகள் உலகளவு ரீதியிலே விரிவுபடுத்தப்பட்டிருந்தது.
அதேபோல எமது ஆட்சி காலத்தில் பல அபிவிருத்தி சேவைகளை வழங்கி இருந்தோம் குறிப்பாக அரசாங்க அரச நிதியை மட்டும் நம்பி இருக்காமல் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிதிகளைக் கொண்டு பல செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.
அதேவேளை உயிர்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்ததோடு அமைக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட சடலம் எரிக்கும் நிலையத்தை புதிப்பித்து திறந்தோம் இதன் மூலம் மக்களுக்கு இலகுவாக தமது மரண செயற்பாடுகளை செய்யக் கூடியதாக இருந்தது.
அவ்வாறே அடைக்கப்பட்டிருந்த வடிகான்களை அனைத்தையும் முன்னாள் ஆளுநரின்; உதவியோடு சுத்தம் செய்து துப்புரவு செய்து இருந்தோம். இவ்வாறு இந்த ஐந்து வருட காலத்தில் மட்டக்களப்பு மாநகர சபை தமது சேவையை சிறப்பாக செய்திருந்தது. இப்படி எனக்கு மட்டக்களப்பு மாநகரத்தில் கிடைத்த அதிகாரம் மட்டக்களப்பு மாவட்டம் முழுதாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நான் இந்த பாராளுமன்ற தேர்தலிலே போட்டியிடுகின்றேன்.
இந்தத் தேர்தலிலே இளம் தலைமுறையினருக்கு முன்னுரிமைப்படுத்தி களமிறக்கியுள்ளோம் கட்சசியை விட்டு வெளியேறி போனவர்கள் தேர்தலிகளில் போட்டியிட்டு தொற்றுப் போனவர்கள் திரும்பதிரும்ப ஒரே நபர்களுக்கு ஆசனம் வழங்கமுடியாது பதவிகளுக்கு இருப்பவர்களுக்கு எமது கட்சியில் இடம் இல்லை வெளியேறியவர்கள் வெளியேறட்டும் வீடு மிக சுத்தமாக வரும்
தமிழரசு கட்சி கட்டுக்கோப்பை இழந்து செயற்பட முடியாது அவர் கட்சி கட்டுக்கோப்பில் இருந்து செயற்பட்ட காரணத்தினால் அவருக்கு எதிராக ஒழுக்க காற்று நடவடிக்கை மூலம் தீர்மானம் எடுக்கப்பட்டு கட்சியினால் அரியேந்திரனுக்கு விசாரணை கோரப்பட்டுள்ள நிலையில் சிறிநேசனுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடபட்டுவது பிழையான செயற்பாடு இது தொடர்பாக மத்தியகுழு கூட்டத்தில் ஆராயப்படும்
அரசாங்கத்தால் தமிழ் தேசியத்துக்கு எதிராக அமுல்படுத்தப்படுகின்ற எந்த செயற்பாட்டிற்கும் ஆதரவு வழங்கமாட்டோம் அதேவேளை நாட்டின் நன்மைக்காக அமுல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம்.
தமிழ்த் தேசிய சிந்தனையில் இருக்கின்ற நாங்கள் தொடர்ச்சியாக எமது மக்களை பாதுகாப்பதோடு வீட்டு சின்னத்துக்கு வாக்களித்து ஏழாம் இலக்கமான எனக்கும் வாக்களிக்குமாறு அன்பான தமிழ் மக்களை கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.