இலங்கை வாழ் எழுத்தாளரும் கனடா உதயன்; தமிழ்நாடு இனிய நந்தவனம் உட்பட இலங்கைக்கு வெளியே பல நாடுகளிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள் பத்திரிகைகளை தனது படைப்புக்களால் அலங்கரித்துள்ள பவானி சச்சிதானந்தன் அவர்களின் நூல்கள் வெளியீட்டு விழா எதிர்வரும் 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஈழத்து கலை இலக்கிய மற்றும் பத்திரிகைத்துறை சார்ந்த ‘பிதாமகர்கள்’ உட்பட இளைய தலைமுறை எழுத்தாளர்கள் கவிஞர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ள இந்த நூல்கள் வெளியீட்டு விழாவில் ‘வாழ்க்கை என்பது’ என்னும் சிறுகதைத் தொகுதியும் ‘ நதிகளின் ஓட்டம் கடலினிலே’ என்னும் கவிதைத் தொகுதியும் வெளியிடப்பெறவுள்ளன.
விழா வெற்றி பெற கனடா உதயன் ஆசிரிய பீடமும் அதன் வாசகர்களும் உலகின் பல பாகங்களிலிருந்தும் வாழ்த்துகின்றனர்