தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் லப்பர் பந்து. வெளியானது முதல் ஒவ்வொரு வாரமும் அதிக திரைகளில் ஓடிக் கொண்டிருக்கும் லப்பர் பந்து திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக லப்பர் பந்து திரைப்படம் மூன்றாவது வாரம் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது. திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், லப்பர் பந்து திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் லப்பர் பந்து திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகவுள்ளது.
