சூர்யாவும், பாலிவுட் நடிகர் ஆமீர் கானும் தயங்கியதை பார்த்த தயாரிப்பாளர்களோ கஜினி 2 படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் எடுத்து ஒரே நாளில் வெளியீடு செய்ய முடிவு செய்திருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் உள்ளிட்டோர் நடித்த கஜினி படம் கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அந்த படத்தை ஆமீர் கான், அசினை வைத்து இந்தியில் மறுபதிப்பு செய்தார் ஏ.ஆர். முருகதாஸ்.
2008-ம் ஆண்டு வெளியான இந்தி கஜினி படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதையடுத்து கஜினி 2 படம் வரவிருக்கிறது. அப்பொழுது சூர்யா படத்தை இந்தியில் மறுபதிப்பு செய்து வெற்றி கண்டார் ஏ.ஆர். முருகதாஸ். தற்போது எல்லாம் ஒரு படம் வெளியானால் மொழி பேதமின்றி ரசிகர்கள் பார்த்து ரசிக்கிறார்கள்.
அதனால் முதலில் தமிழில் கஜினி 2 படத்தை எடுத்துவிட்டு இந்தியில் மறுபதிப்பு செய்தால் வசூல் பார்க்க முடியாது. மேலும் மறுபதிப்பாக கஜினி 2 படத்தில் நடிக்க சூர்யாவும், ஆமீர் கானும் தயாராக இல்லையாம். இதையடுத்து கஜினி 2 படத்தை இந்தி மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம். தமிழ் கஜினியை அல்லு அரவிந்தும், இந்தி கஜினியை மது மான்டெனாவும் தயாரிக்கிறார்களாம். ஒரே நேரத்தில் இரண்டு கஜினி படங்களையும் எடுத்து, வெளியீடு செய்வது குறித்து தயாரிப்பாளர்கள் இருவரும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்களாம். சூர்யாவும், ஆமீர் கானும் மறுபதிப்பில் நடிக்க யோசித்ததை அடுத்தே தயாரிப்பாளர்கள் இப்படியொரு முடிவு செய்து அவர்களிடம் தெரிவித்தார்களாம். ஒரே நேரத்தில் இரண்டு கஜினி 2 படங்களும் உருவாகிறது என்றால் எங்களுக்கு சந்தோஷமே என சூர்யாவும், ஆமீர் கானும் கூறிவிட்டார்களாம். அதுவும் இந்தி கஜினி2 மற்றும் தமிழ் கஜினி 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகுமாம். இந்நிலையில் கஜினி 2 படம் குறித்து சூர்யாவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது, கஜினி 2 குறித்து நீங்கள் கேட்டது ஆச்சரியமாக உள்ளது. கஜினி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாமா, முடியுமா என அல்லு அரவிந்த் கேட்டார். கண்டிப்பா முடியும் சார் என்றேன். அந்த படம் குறித்த பேச்சுவார்த்தை துவங்கிவிட்டது. கஜினி 2 படம் வரும் என்றார்.