நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா – 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு உறுதி செய்துள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. கிட்டத்தட்ட ரூ. 350 கோடி மேல் இந்த திரைப்படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்திற்கு ‘புஷ்பா 2 தி ரூல்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த நிலையில், மீண்டும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் மாற்றியுள்ளனர். அதன்படி, டிசம்பர் 5ம் தேதி இந்த திரைப்படம் உலகளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
