வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் நயாரிட் மாகாணத்தில் இருந்து சிகுவாகுவா மாகாணத்திற்கு சுற்றுலா பேருந்து புறப்பட்டது. பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். ஜகாடெகாஸ் மாகாணத்தில் உள்ள பாலத்தில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லோரி மீது மோதி விபத்துக்குள்ளது.
இந்த கோர விபத்தில் 24 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.