உலகத் தமிழ் கலாச்சாரச் சங்கம் பிரம்ரன் மாநகரில் நடத்திய Symphony of Dance நிகழ்வு
ரொறன்ரோவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் உலகத் தமிழ் கலாச்சாரச் சங்கம் கடந்த 26ம் திகதி சனிக்கிழமை பிரம்ரன் மாநகரில் உள்ள லெல்ஸ்ரர் பி. பியர்சன் ஞாபகார்த்த மண்டபத்தில் நடத்திய மேற்படி Symphony of Dance நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மேற்படி நிகழ்விற்கு பிரம்ரன் மாநகரின் மேயர் பெற்றிக் பிரவுண் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பின்னர் பிரம்பரன் மாநகர சபையின் சார்பில் பாராட்டுப் பத்திரங்களை வழங்கி கௌரவித்தார்.
உலகத் தமிழ் கலாச்சாரச் சங்கத்தின் முக்கிய நிர்வாக உறுப்பினர்களான பரராஜசிங்கம் செல்வநாயகம் அவர்கள் நிரோதினி பரராஜசிங்கம் அவர்கள் உட்பட பலர் மேற்படி நிகழ்வை வெற்றிகரமாக நடத்த திட்டமிட்டு அதில் வெற்றி கண்டுள்ளார்கள் என்றே கூறவேண்டும்.
அன்றைய விழாவில் யுபி-50 என்னும் இசைக்குழுவின் வாத்திய இசையில் பல நடனங்கள் அங்கு மேடையேறின.
இனிதான பல பாடல்களையும் பாடக பாடகிகள் சபையோருக்கான பாடி மகிழ்வித்தார்கள்.
பல்லின கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவின் நடனங்கள் அனைவரையும் கவர்ந்தன.