‘லவ் டுடே’ படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த படத்தை தமிழ் சினிமாவில் ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இவர் கடைசியாக ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் காணொளி மற்றும் ‘தீமா’ பாடலும் வெளியாகி வைரலாகின. இப்படத்தின் ‘தீமா’ பாடலின் படப்பிடிப்பு காணொளியை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. படத்தின் முதல் பாடலான ‘தீமா’ பாடல் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் தற்பொழுது யூடியூபில் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
