கிளிநொச்சியில் தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் பிரதமர் ஹர்ணி அமர சூரியவின் பங்கு பற்றலுடன் நடைபெற்றது. இதன் போது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள், மத குருமார்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இதன்போது பிரதமர் தெரிவிக்கையில், கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக அவர்கள் பதவி ஏற்றதன் பின்னர் பல வருட காலமாக மூடப்பட்டிருந்த ஜனாதிபதி மாளிகையின் சுற்றுவட்ட வீதியை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படுள்ளது.
மற்றும் யாழ்ப்பாணம் பலாலி வசாவிளான் வீதியையும் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்னும் பல வீதிகள் மக்கள் பயன்பாட்டுக்காக கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அது மட்டுமின்றி மக்களின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தற்பொழுது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தாம் திசைகாட்டி சின்னத்துடன் இணைந்து பயணிக்க இருப்பதாகவும், எம்மை பாராளுமன்றம் அனுப்புவதற்கு மக்களை வாக்குகளிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்
சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து வரும் நிலையில் அவர்களும் கூறி வருகின்றனர். தாம் அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க உள்ளதாகவும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டி உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
மன்னிக்கவும், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் 25 அமைச்சுகளை பதவியை வகிப்பார்கள் எனவும் அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களாகவே இருப்பார்கள் எனவும் இதைவிட வேறு எவரும் எமது கட்சியில் இணைத்துக் கொள்ளவோ அவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கு தயாராக இல்லை என அவர்களுக்கு ஜனாதிபதி கூறியுள்ளார் என பிரதமர் 04-11-2024 அன்றைய தினம் கிளிநொச்சியில் தெரிவித்தார்.
அது மட்டுமின்றி வட மாகாணத்திலும் சரி இலங்கையில் எப்பாகத்திலும் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. வெளிநாடுகளில் இருந்தே இதனைக் கொண்டு வந்து எமது பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் எதிர்காலத்தையே அழித்து வருகின்றார்.
எமது அரசாங்கத்தில் இவற்றுக்கெல்லாம் ஓர் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.