ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையின் கமாண்டர் ஹமித் மஜந்தரணி, பாகிஸ்தான் எல்லைக்கு அருகே சக ராணுவ வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆட்டோகைரோவில் (ஹெலிகாப்டர் போன்ற வாகனம்) பறந்துசென்று பயிற்சி மேற்கொண்டபோது, ஆட்டோகைரோ விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கமாண்டர் ஹமித் மற்றும் அவரது பைலட் உயிரிழந்ததாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணம் சிர்கான் எல்லை அருகே ராணுவ நடவடிக்கையின்போது ஜெனரல் ஹமீத் மஜந்தரணி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.