இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார். முன்னதாக, இந்த படத்தை டிசம்பர் 20-ந்தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. பின்னர் ‘கேம் சேஞ்சர்’ படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ந்தேதி திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்தது. இந்த நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. இப்படத்தின் முன்னோட்டம் ஒரே இரவில் மட்டும் சுமார் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
